/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு குடும்பத்தினர் மோதல் 4 பேர் மீது வழக்கு
/
இரு குடும்பத்தினர் மோதல் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2025 07:36 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, வழிப்பாதை பிரச்னையில், இரு குடும்பத்தை சேர்ந்த, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலத்தை சேர்ந்தவர் வேலு மகன் பெரியசாமி,46; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாயக்கண்ணனுக்கும், வழிப்பாதை தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த, 3 ம் தேதி, இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இது தொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில், மாயக்கண்ணன் மற்றும் பெருமாள் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல மற்றொரு தரப்பை சேர்ந்த மாயக்கண்ணன் புகாரின் பேரில், பெரியசாமி மற்றும் பழனிசாமி ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.