/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு
/
மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 14, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த தாய், தந்தை, மகன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வரஞ்சரம் சப்இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தக்குடியை சேர்ந்தவர் அய்யாகண்ணு, 57; என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, அய்யாகண்ணுவை கைது செய்து, அவரிடமிருந்த 34 மதுபாட்டில்களை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அய்யாகண்ணு மனைவி காந்தி, 45; மகன் சுரேஷ், 35; மற்றும் மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த வேப்பூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.