/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
/
இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : அக் 29, 2025 11:35 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் வடக்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்த ரமேஷ் மனைவி சுகுணா,38; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் அரசுக்கு சொந்தமான இடம் அனுபவம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்த சுகுணாவை, மணியின் மனைவி அமுதா,48; மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கணேசன் மகன் சண்முகம், 45; சண்முகம் மகன் தினேஷ், 23; முனுசாமி மகன் பிரகாஷ், 49; ராசாத்தி, 45; ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
இது குறித்து சுகுணா அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் தாக்குதல் நடத்திய 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

