/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு
/
முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே முன் விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மணலுார்பேட்டை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையம்மாள், 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா, 50; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சரோஜா, கணவர் சின்னசாமி, 60; மகன் அஜித், 23; பச்சையம்மாள், 50; அவரது கணவர் அமாவாசை, 60; மகன் தினேஷ், 30; ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.