/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு
/
மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு
மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு
மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை இன்ஸ்., உட்பட 7 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 05, 2025 02:29 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே முன்னாள் ஊராட்சி தலைவரை தற்கொலைக்கு துாண்டியதாக, இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நயினா, 65; முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது தம்பி பன்னீர்செல்வம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குடும்ப சொத்தான 37 ஏக்கர் நிலத்தை நயினா விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் மனைவி சரிதா, 45; தனது கணவருக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தரும்படி நயினாவிடம் கேட்டுள்ளார். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திருநாவலுார் போலீசில் சரிதா புகார் செய்தார்.
போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி, இருவரும் சமமாக நிலத்தை பிரித்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து, க டந்த இரு நாட்களுக்கு முன்பு, கணவரின் அண்ணன் நயினா தன்னை திட்டி தாக்கி மனபங்கப்படுத்தியதாக போலீசில் சரிதா புகார் அளித்தார். இது தொடர்பாக திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, கடந்த 2ம் தேதி, பன்னீர்செல்வத்தை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர், நயினா வீடு திரும்பினார்.
நேற்று காலை விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நயினா, காலை 8:30 மணிக்கு, வி வசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் துாக்கில் தொங்கினார். தகவலின்பேரில் திருநாவலுார் போலீசார் நயினா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் மற்றும் உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அசோகன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தனது கணவரை போலீஸ் நிலையம் அழைத்து மிரட்டிதயால் வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நயினா மனைவி பழனியம்மாள், 62; கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சரிதா, பழனிவேல், சுந்தரம், ஆறுமுகம், சந்திரசேகர், கண்ணன் ஆகிய 7 பேர் மீது தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி. அசோகன் விசாரித்து வருகிறார்.
போலீஸ் மிரட்டலால் மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலைக்கு செய்து கொண்ட சம்பவம், உளுந்துார்பட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.