/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு
ADDED : நவ 26, 2025 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்திரகண்ணன், 55; இவரது சகோதரர் ஜெயராமன், 52; இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 22ம் தேதி இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஜெயராமன், அறிவுக்கரசு, கோகுல், அம்பிகா, சந்திரகண்ணன், ராம்குமார், இளவரசன், இலக்கியா என 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

