/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டிரெய்லரில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
/
டிரெய்லரில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
டிரெய்லரில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
டிரெய்லரில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
ADDED : நவ 26, 2025 07:49 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு வளைவு பகுதியில் டிராக்டர் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 50; கூலித் தொழிலாளி. இவரும், செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலரும் ரோடுமாமாந்துாரில் இருந்து செங்கல் ஏற்றுவதற்காக ஒரு டிராக்டர் டிரெய்லரில் மலைக்கோட்டாலத்திற்கு நேற்று காலை சென்றனர்.
கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதி வளைவில் டிராக்டர் திரும்பியபோது, டிரெய்லரில் இருந்த சேகர் தவறி கீழே விழுந்தார். அப்போது, டிரெய்லரின் பின் சக்கரம் சேகர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.