/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு
ADDED : மார் 18, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : முன்விரோத தகராறில் தாக்கி கொண்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சின்னசேலம் அடுத்த பெருமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 65; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகாரின்பேரில், சுப்ரமணியன், மணிகண்டன், ராஜவேல், ரங்கம்மாள், பொன்னி, பெரியசாமி, கார்த்திக், பிச்சப்பிள்ளை உள்ளிட்ட 8 பேர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.