/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.4.50 லட்சம் மோசடி சகோதரர்கள் மீது வழக்கு
/
ரூ.4.50 லட்சம் மோசடி சகோதரர்கள் மீது வழக்கு
ADDED : ஏப் 16, 2025 08:51 AM
கள்ளக்குறிச்சி : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 4.50 லட்சம் ரூபாய மோசடி செய்த சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் இயேசு பிரபு, 30; இவர் வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ், 36; மற்றும் அவரது சகோதரர் அருண்ராஜ், 30; ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம், இயேசு பிரபுவிடம் கூறி பணம் கேட்டனர். அதை நம்பி அவரும், பல தவணைகளில் 4.50 லட்சம் ரூபாயை இருவரிடமும் கொடுத்தார்.
ஆனால், அவருக்கு வேலை வாங்கித்தராததால் பணத்தை திருப்பிக் கேட்ட போது, கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்து அவர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆனந்தராஜ், அருண்ராஜ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.