/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு
/
மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 15, 2025 10:53 PM
திருக்கோவிலுார், ,;திருக்கோவிலுாரில் மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மனைவி வசந்தி, 48; இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், வசந்தி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணிக்கு வசந்தியின் வீட்டிற்குச் சென்ற ஜாகிர் உசேன், 52; வசந்தியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தார்.
வசந்தி கொடுத்த புகாரின் பேரில், ஜாகிர் உசேன் மீது திருக்கோவிலுார் போலீசார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.