UPDATED : நவ 16, 2026 07:56 PM
ADDED : நவ 16, 2026 07:54 PM
கள்ளக்குறிச்சி: கீழக்குப்பம் அருகே லாரியின் கண்ணாடியை உடைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தில், பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் குடிநீர் டேங்கிற்கான மின் மோட்டார் பழுதாகியுள்ளது. இதையொட்டி, பி.டி.ஓ., அலுவலக ஏற்பாட்டின் பேரில், கடந்த 8ம் தேதி லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மருதமுத்து,52; என்பவர், எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்கவில்லை என கேட்டு, லாரி டிரைவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, கல்லால் லாரி கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து, சின்னசேலம் துணை பி.டி.ஓ., கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மருதமுத்து மீது, கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
