/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி செயலாளரை தாக்கியவர் மீது வழக்கு
/
ஊராட்சி செயலாளரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : நவ 28, 2025 05:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பிரவின்ராஜ், 26; உலகங்காத்தான் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 26ம் தேதி உலகங்காத்தான் கிராமத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக பைக்கில் சென்றார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன், வழிமறித்து தேசிய ஊரக வேலை திட்டத்தில் எங்களுக்கு ஆணையிடவோ, உத்தரவு போடவோ கூடாது எனக் கூறி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
பிரவின்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

