/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு
/
புகையிலை பொருள் விற்ற பெண் மீது வழக்கு
ADDED : நவ 07, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த பெண் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் சோதனை செய்தனர். அதில் நாவு மனைவி வள்ளி, 59; என்பவரது பெட்டிக் கடையில் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. கடையில் இருந்த 45 ஹான்ஸ் பாக்கெட்டுகளை சங்கராபுரம் போலீசார் பறிமுதல் செய்து, வள்ளி மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

