/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உணவு பொருட்கள் மாதிரி சேகரிப்பு
/
உணவு பொருட்கள் மாதிரி சேகரிப்பு
ADDED : நவ 07, 2025 11:13 PM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் மூலம் உணவு பொருட்கள் மாதிரி சேகரிக்கப்பட்டது.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு அதிகாரி சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் சங்கராபுரத்தில் உள்ள மளிகை, பேக்கரி, உணவகம், பல்பொருள் அங்காடி ஆகிய இடங்களில் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக எடுத்து சென்றார்கள். பின்னர் அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சுகாதாரமான முறையில் கலப்படம் இல்லாமல் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
தொடர்ந்து சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் தரம் கண்டறிவது குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பைகள் தவிர்க்கப்பட வேண்டிய அவசியம், சிறிய சோதனை மூலம் சரியான உணவுப் பொருட்களை கண்டறிவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் குசேலன், மளிகை பிரிவு தலைவர் ராஜேந்திரன், ஹோட்டல் பேக்கரி பிரிவு தலைவர் சுதாகரன், பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

