ADDED : செப் 10, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னையில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு மனைவி சுபா, 24; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பட்டாளத்தான், 36; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்தரிமடைந்த பட்டாளத்தான், சுபாவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் பட்டாளத்தான் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
