/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு

ADDED : செப் 21, 2025 11:11 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு டீசலுடன் வந்த 3 பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி அசோதை, 65; ஆந்திரா மாநிலம், இந்துப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி பச்சையம்மாள், 62; வாணாபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து மனைவி லட்சுமி, 60; ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அங்கு பணியில் இருந்த போலீசார் 3 பேரிடமும் விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 2 லிட்டர் டீசலும், தீப்பெட்டியும் இருந்தது தெரிந்தது. உடன் போலீசார் டீசலை பறிமுதல் செய்து, 3 பேரையும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து டீசலுடன் எதற்கு வந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.