/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சி.சி.டி.வி., கேமரா மீண்டும் பொருத்தம்
/
சி.சி.டி.வி., கேமரா மீண்டும் பொருத்தம்
ADDED : ஜூலை 10, 2025 02:42 AM

சங்கராபுரம், : தினமலர் செய்தி எதிரொலியால், கடுவனுார் கிராமத்தில் புதிதாக சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்டட்டது.
சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க போலீஸ் சார்பில் கடவனுார் பஸ் நிறுத்தத்தில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை விரிவாக்க பணியின்போது சி.சி.டி.வி., கேமரா கம்பத்தை அகற்றி சாலையோர குப்பை கொட்டும் இடம் அருகே வைத்தனர். சாலை பணிகள் முடிந்த பின்னும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்படவில்லை.
இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, குப்பை கொட்டும் இடம் அருகே வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமரா கம்பம், கடுவனுார் பஸ் நிறுத்தத்தில் மீண்டும் அமைத்து, புதிய கேமரா பொருத்தப்பட்டது.