/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடும்ப பதிவேடுக்கான கணக்கெடுப்பு பணி
/
குடும்ப பதிவேடுக்கான கணக்கெடுப்பு பணி
ADDED : ஜூலை 07, 2025 02:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் குடும்ப பதிவேடுக்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா வழிகாட்டுதல்படி, மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி நகரப்பகுதி, 21 வார்டுகளில், குடும்ப பதிவேடுக்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. வீடுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, நோய் விபரங்கள், அதற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
எடுத்தவாய்நத்தம் கிராம ஆஷா பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.