/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளிகள் இன்று செயல்படும் சி.இ.ஓ., அறிவிப்பு
/
பள்ளிகள் இன்று செயல்படும் சி.இ.ஓ., அறிவிப்பு
ADDED : நவ 01, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று 1ஆம் தேதி செயல்படும் என சி.இ.ஓ., அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்தது.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி, கல்லுாரிகளுக்கும் 22ம் தேதி (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இன்று 1ம் தேதி செயல்படும் என சி.இ.ஓ., கார்த்திகா அறிவித்துள்ளார்.

