/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய கராத்தேவில் வெண்கலம் அரசு பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
/
தேசிய கராத்தேவில் வெண்கலம் அரசு பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
தேசிய கராத்தேவில் வெண்கலம் அரசு பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
தேசிய கராத்தேவில் வெண்கலம் அரசு பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
ADDED : டிச 28, 2025 06:36 AM

கள்ளக்குறிச்சி: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடை பிரிவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணவரெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிந்து முதலிடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய பள்ளிக்கல்வி குழும விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதில் மாணவி சிந்து, மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி சிந்து, கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகாவை சந்தித்து பதக்கம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் பாரதிதாசன், பயிற்சியாளர் சசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.