/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வருவாய் ஆய்வாளர் கட்டடம் திறப்பு; காலணி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

ADDED : ஜன 29, 2025 11:24 PM

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் இ சேவை மையம், வருவாய் ஆய்வாளர் கட்டடங்களை திறந்து வைத்து. மத்திய காலணி பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர், எம்.எல்.ஏ., வழங்கினர்.
உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இ- சேவை மைய கட்டடத்தை கலெக்டர் பிரசாந்த், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., திறந்து குத்துவிளக்கேற்றி வைத்தனர். பின்னர் மத்திய காலணி பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி முடித்த 200 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் புட்வேர் பொது மேலாளர் ஹைகுளோரி, மத்திய காலணி பயிற்சியாளர் முரளி, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், தாசில்தார் அனந்த கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் டேனியல்ராஜ், குருமனோ, ராஜேஸ்வரிசரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செங்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை கலெக்டர் பிரசாந்த் திறந்து வைக்க, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி வைத்தார்.