/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
/
கீழையூர் மகா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஆக 07, 2025 02:37 AM

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் கீழையூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருக்கோவிலுார், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாலை 2:40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்துள்ள, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை சாக்கை வார்த்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.