/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சென்னை ஆட்டோ டிரைவரிடம் ரூ. 6.5 லட்சம் 'அபேஸ்'
/
சென்னை ஆட்டோ டிரைவரிடம் ரூ. 6.5 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 31, 2025 04:03 AM
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே ஆம்னி பஸ்சில் பயணியிடம் ரூ. 6.5 லட்சம் பணத்தை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து, 62; ஆட்டோ டிரைவர். இவரது பூர்விகமான துாத்துக்குடியில் இருந்த நிலத்தை விற்பனை செய்து, ரூ. 6.5 லட்சம் பணம் பெற்றார்.
இந்த பணத்துடன், துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் புறப்பட்டார். நேற்று காலை 4:00 மணியளவில், பயணியர் டீ குடிப்பதற்காக உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருகே , பஸ் நி ன்றது. அப்போது, பணம் இருந்த பையை பஸ்சில் வைத்துவிட்டு, பேச்சிமுத்து டீ குடிக்க சென்றார். மீண்டும் பஸ்சில் ஏறி பார்த்தபோது, பணம் வைத்திருந்த பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பேச்சிமுத்து கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.