/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இடம் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு

ADDED : நவ 03, 2024 11:28 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைவிடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்தார்.
சின்னசேலத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்காலிகமாக நீதிமன்றம் செயல்படுவதற்கான அமைவிடம் மற்றும் புதிய கட்டடம் இடம் தேர்வு தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடத்தில், தற்காலிகமாக நீதிமன்றம் செயல்படுத்த இடம் தேர்வு செய்தார்.
தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கும் இடத்தையும் பார்வையிட்டார்.
மேலும், தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட உள்ள பழைய கட்டடத்தில் அதற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், தாசில்தார் விஜயன், பி.டி.ஓ., ரவிசங்கர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ேஹமா, உதவி செயற்பொறியாளர்கள் மாலா, இமாம்ெஷரீப், பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், வருாவய் ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.