/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிற்கு ஆபாச குறுந்தகவல் சென்னை வாலிபர் கைது
/
பெண்ணிற்கு ஆபாச குறுந்தகவல் சென்னை வாலிபர் கைது
ADDED : ஜூலை 14, 2025 03:57 AM
திருக்கோவிலுா : திருக்கோவிலுார் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுாரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண் தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 29ம் தேதி அடையாளம் தெரியாத நபரின் இன்ஸ்டாகிராமில் இருந்து பெண்ணின் இன்ஸ்டாகிராமிற்கு ஆபாச குறுந்தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.
இது குறித்து அப்பெண் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி வருவது, சென்னை, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் டேவிட், 27; என தெரியவந்தது. திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.