/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு கூடுதல் பதிவாளரிடம் காசோலை வழங்கல்

ADDED : டிச 17, 2025 05:56 AM

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஈட்டிய லாப தொகையில் 5 சதவீத பங்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வி நிதிக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ரேணுகாம்பாள் தலைமை தாங்கி னார். மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கடந்த 2023 - 24 மற்றும் 2024 - 25 ஆகிய நிதியாண்டுகளில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஈட்டிய மொத்த லாப தொகையில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு 3 சதவீதமும், கூட்டுறவு கல்வி நிதிக்கு 2 சதவீதமும் வழங்கப்பட்டது.
அதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு ரூ. 58 லட்சத்து 91 ஆயிரத்து 847, கூட்டுறவு கல்வி நிதிக்கு ரூ.39 லட்சத்து 27 ஆயிரத்து 898 என மொத்தமாக 98 லட்சத்து 19 ஆயிரத்து 745 ரூபாய்க்கான காசோலையினை விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி வழங்கினார். அப்போது, மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்குமார், பொது மேலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.