/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 05:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., ஒருங்கிணைப்புக்குழு செந்தில், விஜயகுமார், நிதி பொறுப்பாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் மோகன், சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் மோகன் கண்டன உரையாற்றினர்.
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், வீடு கட்டும் திட்டத்தில் ஆய்வு முடித்த மனுக்களுக்கு உடனடி பணப்பலன்கள் வழங்கக வேண்டும், இயற்கை, விபத்து மரண உதவித்தொகை தொடர்பான மனுக்களை தாமதப்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் வீரபாண்டியன், சங்கர், ராமச்சந்திரன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

