/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் கோழிகள்
/
ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் கோழிகள்
ADDED : மார் 27, 2025 04:42 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில், நாட்டின கோழிக்குஞ்சுகளை, ஆதரவற்ற பெண்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில், கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில் நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், 100 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், கல்வராயன் மலை, சின்னசேலம், திருநாவலுார், தியாகதுருகம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், 900 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த கோழிகளை பயனாளிகள் நல்ல முறையில் வளர்த்து விற்பனை செய்து வருமானத்தை பெருக்கி பயன் பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயன்,டாக்டர்கள் பிரின்ஸ், பாலாஜி, நவின், கோகிலா, தங்கராசு, தேவி ரஞ்சனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.