/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
/
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 14, 2025 11:17 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 'குழந்தைகளுக்காக நடக்கவும்' விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 'குழந்தைகளுக்காக நடக்கவும்' விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
பேரணியில், குழந்தைககளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை தடுத்திட வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம், பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

