/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 14, 2025 11:17 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விவசாய கண்காட்சி நடந்தது.
திருக்கோவிலுார் சரஸ்வதி வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விவசாய கண்காட்சிக்கு நகர கவுன்சிலர் கோல்டுரவி தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் வளர்மதி வரவேற்றார். பள்ளி தாளாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா மேல்நிலை பள்ளி செயலாளர் ராஜா சுப்பிரமணியம், சுபிக்ஷா கவுதம் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் தயாரித்துக் கொண்டு வந்த இயற்கை உணவுகள், அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
இதனை பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். லட்சுமி வித்யாலயா மேல்நிலை பள்ளி முதல்வர் பரணி, பாலாஜி, சரண்யா, ப்ரீத்தி, பிரனேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

