/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : நவ 14, 2025 11:17 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் பழமை வாய்ந்த சுந்தர ஆஞ்சநேய சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த பழமையான சுந்தர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை மகா சம்ப்ரோச்சனம் நடக்கிறது. முன்னதாக நேற்று காலை சங்கல்பம், புண்ணியாக வசனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கலா கர்ஷனம், ஹோமங்கள், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணங்கள் தொடக்கம் நடந்தது.
இன்று காலை ததுக்த ஹோமங்கள், மகா சாந்தி ஹோமம், மாலை நவ கலச ஸ்தாபனம், சப்த கலச ஸ்தாபனம், மகா சாந்தி திருமஞ்சனம், புர்ணாஹூதி நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை காலை புண்ணியாக வசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடாகி காலை 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் விமான மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஜீயர் தேகளீட ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், பவர் ஏஜென்ட் கோலாகலன் ஏற்பாட்டில், பக்தர்களின் உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

