/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி அதிகாரிகள் முறையாக செய்வதில்லை: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி அதிகாரிகள் முறையாக செய்வதில்லை: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி அதிகாரிகள் முறையாக செய்வதில்லை: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி அதிகாரிகள் முறையாக செய்வதில்லை: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 14, 2025 11:18 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை அதிகாரிகள் முறையாக செய்வதில்லை என அ.தி.மு.க., குற்றம் சாட்டி உள்ளது.
அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, நிருபர்களிடம் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை அதிகாரிகள் முறையாக செய்வதில்லை. அமைச்சர் வேலுவின் உத்தரவுபடி, அதிகாரிகள் வீடு வீடாக சென்று நேரடியாக கணக்கெடுப்பு நடத்தாமல், ஒரே இடத்தில் அமர்ந்து பணிகளை செய்கின்றனர். இதில், ஆளும் கட்சி தலையீடு இருந்தால், அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கள்ளக்குறிச்சியில் தற்போது உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றிவிட்டு, ஆளும்கட்சி பெயரில் புதிதாக சிலை அமைக்க முற்படுகின்றனர். கட்சி பாகுபாடு இன்றி அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் சேர்த்து சிலை வைப்பதை வரவேற்கிறோம்.
வீரசோழபுரத்தில் அவசர கதியில் கட்டப்படும் புதிய கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் 'ஆர்ச்' இல் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மூன்று ஏரிகளுக்கு நடுவே பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவசர கதியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மழை காலத்தில் பஸ் நிலையம் நீரில் மூழ்கும். பஸ் நிலையத்திற்கு தானமாக இடம் கொடுத்த நபர் மீது அமலாக்க துறையில் வழக்கு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிய பெரிய பாலம் தண்ணீரில் அடித்து சென்றது. ரிஷிவந்தியத்தில் புதிதாக வெட்டப்பட்ட குடிநீர் கிணறு மூன்று மாதத்திலேயே இடிந்தது. மாவட்டத்தில் பல இடங்களில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகிறது. இதுதான் தி.மு.க., ஆட்சி நிர்வாகத்தின் அவலமும் நிலைபாடும் என கூறினார். அப்போது, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

