/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா
/
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா
ADDED : மே 08, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா நடந்தது.
திருக்கோவிலுார், மருத்துவமனை சாலையில் உள்ள, பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத விசாக நட்சத்திர பெருவிழா கடந்த,3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின், 5ம் நாளான நேற்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலையில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் வரும்,11ம் தேதி ஞாயிற்றுக் காலை தேரோட்டமும் நடக்கிறது.

