/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கவுன்சில் அமைக்க கோரிக்கை கட்டட பொறியாளர் சங்கத்தினர் மனு
/
கவுன்சில் அமைக்க கோரிக்கை கட்டட பொறியாளர் சங்கத்தினர் மனு
கவுன்சில் அமைக்க கோரிக்கை கட்டட பொறியாளர் சங்கத்தினர் மனு
கவுன்சில் அமைக்க கோரிக்கை கட்டட பொறியாளர் சங்கத்தினர் மனு
ADDED : அக் 24, 2025 11:49 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கட்டட பொறியாளர் சங்கத்தினர் கவுன்சில் அமைத்து தர வேண்டும் என முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.
சங்க தலைவர் ரவி, செயலாளர் சையத் ரியாஸ், பொருளாளர் கணேசன், சாசன தலைவர் நக்கீரன், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பானது 97 கட்டட இன்ஜினியர் சங்கங்களை உள்ளடக்கியது. இந்த சங்கங்களில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரும் பட்டம் பெற்று சுய தொழில் புரிபவர்கள்.
தேர்தல் அறிக்கையில் தாங்கள் கூறியபடி, தமிழகத்தில் கட்டட பொறியாளர்கள் கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டட பொறியாளர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் பதிவு செய்தால் மாநிலம் முழுதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பதிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை பதிவு செய்தால் அவர்களுடைய ஆயுட்காலம் வரை அந்த பதிவை புதுப்பிக்காமல் தொடர்ந்து செல்லத்தக்கதாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ஒருமுறை கடவுச்சொல் வரத்தக்க வகையில் கட்டட அனுமதி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

