/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு பிரிவினருக்கிடையே மோதல் சங்கராபுரம் அருகே பதற்றம்
/
இரு பிரிவினருக்கிடையே மோதல் சங்கராபுரம் அருகே பதற்றம்
இரு பிரிவினருக்கிடையே மோதல் சங்கராபுரம் அருகே பதற்றம்
இரு பிரிவினருக்கிடையே மோதல் சங்கராபுரம் அருகே பதற்றம்
ADDED : நவ 01, 2024 11:11 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் கனிஷ்கர், 24; இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.
இதனை ஊர் பகுதியைச் சேர்ந்த ரவி, 55; என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கனிஷ்கர், ரவியை தாக்கினார். அதனைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு 9:30 மணியளவில் ரவியை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கொசப்பாடி - சங்கராபுரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று 10:30 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ரவி கொடுத்த புகாரின் பேரில், கனிஷ்கர், ஏழுமலை, தீன் தமிழன், ஸ்ரீராம், வினிஷ், சுதேசி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து கனிஷ்கரை கைது செய்தனர்.
மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் உட்பட 35 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
மேலும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில், 50க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

