/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இதயா கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
/
இதயா கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 20, 2025 07:39 AM
சின்னசேலம் : சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி செயலாளர் ஜான்சிசோபியா மேரி தலைமை தாங்கினார். பேராசிரியை பிரவீணா வரவேற்றார். பேராசிரியை கேத்தரினாமேரி வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில், ஓமலுார் செயின்ட் ஜோசப் பள்ளி இயக்குனர் விமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் மனோகரன் வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்வர் காந்திமதி இக்கல்வி ஆண்டுக்கான திட்ட அறிக்கை வாசித்தார். தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக 2ம் ஆண்டு மாணவிகளின் குழு நடனம் நடந்தது. விழாவில் பேராசிரியர் சிவஞானம் உட்பட கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பீட்டர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.