/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் குறு மைய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
/
திருக்கோவிலுார் குறு மைய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
திருக்கோவிலுார் குறு மைய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
திருக்கோவிலுார் குறு மைய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
ADDED : ஆக 14, 2025 12:42 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கபிலர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குறுமைய விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், திருக்கோவிலுார் கலைக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வந்தது. இதில் கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இதன் நிறைவு விழா கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர் வில்வபதி முன்னிலை வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், உடற்கல்வி ஆய்வாளர்கள் பாலாஜி, ஹரி, முருகவேல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.