/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம் கலெக்டர் அறிவிப்பு

ADDED : அக் 05, 2025 03:43 AM
கள்ளக்குறிச்சி : ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் ஏழை எளிய குடும்ப மாணவ மாணவிகள் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 10 அல்லது பிளஸ் 2 முடித்தவுடன் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களின் கல்வி தடைபடாமல் உயர்கல்வி சேர்க்கை அதிகரிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் உயர் கல்வி படிப்பு உறுதி செய்யப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டு முதல் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. கல்லுாரியில் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இருந்தாலும் இத்திட்டங்களின் கீழ் உதவிதொகை பெறலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து, வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.