/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.எம்., கிசான் நிதி உதவித்தொகை விவசாய அடையாள எண் கட்டாயம் கலெக்டர் அறிவிப்பு

ADDED : அக் 18, 2025 07:14 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் 21வது தவணை நிதி உதவித்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் பெற வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 86 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
இதுவரை 20 தவணைகளாக தொகை வழங்கப்பட்டுள்ளது. 21வது தவணை தொகை நடப்பு மாத இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள எண் அடிப்படையில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இதுவரை 23,297 விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண் பெறாமல் உள்ளனர். எனவே, விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு, ஆதார் எண், ஆதாருடன் இணைப்பிலுள்ள மொபைல் எண் மற்றும் சிட்டா நகலை சமர்ப்பித்து உடனடியாக தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.