/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்திட கலெக்டர் அழைப்பு
/
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்திட கலெக்டர் அழைப்பு
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்திட கலெக்டர் அழைப்பு
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்திட கலெக்டர் அழைப்பு
ADDED : டிச 01, 2024 04:33 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,526 எக்டரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தென்னை காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தென்னை மரங்களை இயற்கை பேரிடர், பூச்சி நோய் பாதித்தல் இழப்பீடு பெற முடியும்.
அதற்காக தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மாநில அரசு மானியத்துடன், தென்னை பயிர் காப்பீட்டு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா லிமிடெட், சென்னை எனும் நிறுவனம் மூலம் தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதார் நகல், சிட்டா, அடங்கல், நில வரைப்படம் ஆகிய ஆவணங்களுடன் பீரிமியம் தொகையை வங்கி வரைவோலையாக எடுத்து தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் 4 முதல் 15 வயதிற்குட்பட்ட மரம் ஒன்றுக்கு காப்பீட்டு தொகை 900 ரூபாய் வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் ஓராண்டுக்கு 2.25 ரூபாய், இரண்டு ஆண்டுக்கு 4.16 ரூபாய், மூன்றாண்டுக்கு 5.91 ரூபாய் என பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
தென்னை மரம் 16 முதல் 60 ஆண்டுக்குள் இருந்தால் மரத்திற்கு காப்பீட்டு தொகை 1,750 ரூபாய் வழங்கப்படும். இதற்கு ஓராண்டுக்கு 3.50 ரூபாய், இரண்டு ஆண்டுக்கு 6.48 ரூபாய், மூன்றாண்டுக்கு 9.19 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.