/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
/
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 09, 2025 06:30 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பிரசாந்த் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் உள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட பல்வேறு கால இடைவெளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஆய்வில் அரசு சேமிப்புக் கிடங்கில் உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.