/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.ஐ.ஆர்., பணி உதவி மையங்களில் கலெக்டர் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., பணி உதவி மையங்களில் கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 09, 2025 03:48 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர திருத்த பணி கணக்கெடுப்பு படிவங்கள் சமர்பிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறப்பு தீவிர திருத்த பணிக்காக உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி, திரும்ப பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதன் காலக்கெடு, வரும் 11ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பி.எல்.ஏ., மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர்களின் உதவிக்கென சிறப்பு உதவி மையம் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை அமைத்து, சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதியில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி உருது தொடக்கப்பள்ளி மற்றும் உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதியில் பிடாகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

