/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : செப் 27, 2025 02:28 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் தீர்வு மற்றும் நிலுவை தொடர்பான விபரம், ஆக்கிரமிப்பு அகற்றம், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அங்கன்வாடிகளில் அடிப்படை வசதிகள், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்ட முன்னேற்பாடுகள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், தடையின்றி குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வருவதும், அனைத்து துறைகளிலும் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி னார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.