/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குரூப் 4 தேர்வுக்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
/
குரூப் 4 தேர்வுக்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
குரூப் 4 தேர்வுக்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
குரூப் 4 தேர்வுக்கு காலை 9:00 மணிக்குள் வர வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 02:43 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு, தேர்வர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு அறைக்குள் வர கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வினை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, வாணாபுரம் ஆகிய வட்டங்களில் உள்ள 97 தேர்வு மையங்களில் 28,211 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தேர்வு மையங்களை சம்மந்தப்பட்ட தாசில்தார்கள் நேரில் பார்வையிட்டு, போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போலீஸ் சார்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதுமான அறைக் கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான, 'ஸ்கிரைப்' (எழுத்தர்) உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தடையில்லா மின்சாரம், தேவையான தீயணைப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிட வசதியாக போதுமான அளவு பஸ்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு மையங்களை சுகாதாரமாக பராமரிக்கவும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு மையங்களுக்கு சென்றுவர சாய்வுதளம் மற்றும் வீல்சேர் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் கூறுகையில்; கள்ளக்குறிச்சியில் நடக்கும் குரூப் 4 தேர்வு எழுத வரும் தேர்வர்கள், சரியாக காலை 9:00 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குள் வர வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சுமதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.