/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்கால பாதுகாப்பு விதிமுறை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்
/
மழைக்கால பாதுகாப்பு விதிமுறை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்
மழைக்கால பாதுகாப்பு விதிமுறை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்
மழைக்கால பாதுகாப்பு விதிமுறை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : அக் 25, 2025 07:45 AM
கள்ளக்குறிச்சி: மழை காலங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மழைக் காலங்களில் குளோரின் கலந்த குடிநீரை காய்ச்சி வடிகட்டிபருக வேண்டும். சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாள வேண்டும். உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்ற வேண்டும்.
மேலும், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்லக் கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது 'டிவி', கம்ப்யூட்டர், மொபைல் போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க கூடாது.
தொடர்ந்து, புயல் காலங்களில் வீட்டுக்குள் மின்சாரம் எரி வாயுவை அணைக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
பழுதடைந்த வீடாக இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புங்கள். சேதமடைந்த கட்டடத்தின் அருகே செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

