/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து கடிதங்களையும் தமிழில் அனுப்ப கலெக்டர் அறிவுறுத்தல்
/
அனைத்து கடிதங்களையும் தமிழில் அனுப்ப கலெக்டர் அறிவுறுத்தல்
அனைத்து கடிதங்களையும் தமிழில் அனுப்ப கலெக்டர் அறிவுறுத்தல்
அனைத்து கடிதங்களையும் தமிழில் அனுப்ப கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கடிதங்களையும் தமிழில் அனுப்ப வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2 நாட்கள் நடந்த கருத்தரங்கில் ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில் மொழிப்பயிற்சி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறைகள், ஆணைகள் அணியம் செய்தல், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள் ஆகியவைக் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் பயிலரங்கத்தில் ஆட்சிமொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கை, கணினித்தமிழ், மொழிப்பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்து பயிலரங்கம் நிறைவு செய்யப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைத்து அரசாணைகளும் தமிழில் வெளிவருகிறது. எனவே அரசு பணியாளர்கள் பொதுமக்களுக்கு அனுப்புகின்ற அனைத்து கடிதக் கோப்புகளும் தமிழில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) சிவசங்கரி உட்பட பலர் பங்கேற்றனர்.