/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க கலெக்டர்...ஆலோசனை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு
/
கோடையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க கலெக்டர்...ஆலோசனை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு
கோடையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க கலெக்டர்...ஆலோசனை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு
கோடையில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க கலெக்டர்...ஆலோசனை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு
ADDED : மார் 18, 2025 04:12 AM

திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து சின்னசேலம் வரை ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
திருக்கோவிலுார் அடுத்த சுந்தரேசபுரம் தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் 'பம்ப்பிங்' செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஆங்காங்கே நீர் உந்தும் நிலையங்கள் அமைத்து நகர பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அதேபோல் கிராமப் பகுதிகளில் கோமுகி, மணிமுக்தா ஆறு, தடுப்பணைகள் அருகே போர்வெல் அமைத்தும், திறந்தவெளி கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், வறட்சி காலங்களில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும். இதனால், பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவர்.
இந்நிலையில் பெஞ்சல் புயல் மழையால் மாவட்டத்தில் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டமும் 'கிடு கிடு' என குறையும் நிலை உள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும்.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை தடுப்பது குறித்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன், கலெக்டர் பிரசாந்த் ஆலோசனை நடத்தினார்.
அதில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள நீரின் இருப்பு, கோடை காலத்திற்கு தேவையான நீரின் இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களை கண்டறிந்து சீரான குடிநீர் விநியோகிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மை திட்டங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும்.
குடிநீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.