/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில நெடுஞ்சாலை விபத்து பகுதிகளில் ஆய்வு செய்து பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
/
மாநில நெடுஞ்சாலை விபத்து பகுதிகளில் ஆய்வு செய்து பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
மாநில நெடுஞ்சாலை விபத்து பகுதிகளில் ஆய்வு செய்து பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
மாநில நெடுஞ்சாலை விபத்து பகுதிகளில் ஆய்வு செய்து பாதுகாக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜன 30, 2025 11:07 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகள் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார்.திருக்கோவிலுார் சப்-கலெக்டர் சிங் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் விபத்து நடக்கும் மாநில நெடுஞ்சாலை பகுதிகள் குறித்து முழு விபரத்தை கொடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதிகளில் போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு சாலை விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் உளுந்துார்பேட்டை-விருத்தாசலம் சந்திப்பு பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும். இ-சலான்கள் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி, டி.எஸ்.பி., தேவராஜ், முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மணிமொழி, என்எச்ஏஐ., திட்ட மேலாளர் சதீஷ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், அனைத்து தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.