/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவு
/
தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவு
தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவு
தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 04, 2025 04:40 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கால்நடை துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பிறப்புக் கட்டுப்பாடு திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் நகராட்சிகள், வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், மணலுார்பேட்டை, சின்னசேலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் கால்நடை பிறப்புக்கட்டுபாடு திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தல், வெறி நாய் தடுப்பூசி போடுதல் ஆகிய திட்டங்களுக்கான அனைத்து வசதிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், நடவடிக்கையை விரைந்து மேற்கொண்டு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கால்நடை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கால்நடை பராமரிப்பு துணை மண்டல இணை இயக்குனர் மோகன், கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

