/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு திட்ட கட்டுமான பணிகளில் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு

ADDED : ஆக 02, 2025 06:46 AM

கள்ளக்குறிச்சி : அரசு திட்ட கட்டுமான பணிகளில், தரமான பொருட்கள் பயன்படுத்த கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. இதில் கனவு இல்ல திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
அதன்பின், புதிய திட்ட பணிகளை விரைவாக துவங்க வேண்டும், நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், வளர்ச்சி திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
நடைபெறும் கட்டுமான பணிகளில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு மேற்கொள்ள வேண் டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.